பாலின சமத்துவ தேசிய பிரசாரம் விழிப்புணர்வு பேரணி

3பார்த்தது
பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரசாரம் இன்று தொடங்கி டிசம்பர் 23 வரை அனைத்து மாவட்டத் தலைநகரங்கள், வட்டாரத் தலைநகரங்கள் மற்றும் ஊராட்சிகளில் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை ஆட்சியரகப் பகுதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாவட்டத் தலைநகரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி கொடியசைத்து தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் கவிதப்ரியா, உதவி திட்ட அலுவலர்கள் S. ராஜ்மோகன், ம. கனகசுந்தரி, K. விஜயசங்கரி, வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயலர் விக்னேஷ்வரன், வட்டார இயக்க மேலாளர்கள் விக்னேஷ்வரி, கல்பனா, அமுதா, ராதா மற்றும் மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். பாலின சமத்துவம், மகளிர் உரிமைகள், பெண்களின் சமூக-பொருளாதார முன்னேற்றம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி