காளையார்கோவில்“மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி

3பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள புனித மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், தமிழ் இணையக் கல்விக்கழகம் மற்றும் உயர்கல்வித் துறை இணைந்து “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சியை இன்று நடத்தியது. தமிழ் மரபு, பண்பாடு, சமூக விழிப்புணர்வு மற்றும் பொருளாதார முன்னேற்றம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பத்மஸ்ரீ முனைவர் நர்த்தகி நடராஜ், தமிழின் தொன்மை, பண்பாடு, சமூக சமத்துவம் மற்றும் மகளிர் மேம்பாடு குறித்துப் பேசினார். மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன், தொழில் வளர்ச்சி குறித்த வழிகாட்டும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. சிறந்த கேள்விகள் கேட்ட மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி