கௌரவ ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டம்

401பார்த்தது
தமிழகம் முழுவதும் அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ ஆசிரியர்கள், தங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்த ஊதியம், 12 மாத ஊதியம், PF/EF வசதி, மகப்பேறு விடுப்பு, மற்றும் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணிக்கொடை வழங்கக் கோரி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியிலும் இன்று முதல் போராட்டம் தொடங்கியுள்ளது. சுமார் 8,000 கௌரவ ஆசிரியர்கள் மாதம் ரூ. 25,000 மட்டுமே பெறுவதாகவும், இது வாழ்வாதாரத்தை பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்ததால் மாணவர்கள் வீட்டிற்கு திரும்பினர், கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you