மானாமதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம், தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள அரசை உடனடியாக விமர்சிப்பது சரியல்ல என்றும், அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார். திமுக ஒரு வலுவான அரசியல் கட்சி என்றும், முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் மீது தனக்கு மரியாதை இருப்பதாகவும், அந்தக் கட்சியை குறைத்து மதிப்பிட முடியாது என்றும், எதிர்காலத்திலும் அதன் பங்கு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.