சிவகங்கை மாவட்டம் மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினருக்கு வந்தவாசி பேருந்து நிறுத்தம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது வந்தவாசி பகுதியைச் சேர்ந்த தனபாலன் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் அடிப்படையில் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.