மேலப்பூங்குடி: ஆடு மேய்க்க சென்ற சிறுமி சடலமாக மீட்பு

50பார்த்தது
மேலப்பூங்குடியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவி அபிநயா (12) ஆடு மேய்க்கச் சென்றபோது காணாமல் போனார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஊரணியில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி