சிவகங்கை பேருந்து நிலையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன், வேப்பங்குடி, பிரான்மலை, தெற்கு சந்தனூர் உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்படும் புதிய வழித்தட பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த புதிய பேருந்து சேவைகள் கிராமப்புறங்களில் இருந்து நகரத்திற்கு தினசரி பயணம் செய்யும் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகுந்த பயன் தரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.