சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த எம்பி கார்த்தி சிதம்பரம், அதிமுக நான்கு தேர்தல்களில் தோல்வியடைந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால், அக்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அதிமுகவில் தீவிரமாக இருப்பவர்கள் கூட எடப்பாடியை ஏற்கவில்லை என்றும், கட்சி உடையலாம், புதிய தலைமை வரலாம் அல்லது மற்ற கட்சிகளுடன் இணையலாம் என பல மாற்றங்கள் வரலாம் என்றும் அவர் தெரிவித்தார்.