பணி நிரந்தரம் கோரி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

3பார்த்தது
பத்து ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு ஊழியர்களை அரசுத் துறையின் காலிப் பணியிடங்களில் பணியமர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் கே. குமரேசன் தலைமை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்க மாவட்டச் செயலாளர் கே. முத்துக்குமார், மாநில துணைத் தலைவர் ஏ. மிக்கேலம்மாள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் மு. செல்வகுமார் ஆகியோர் பேசினர். நீண்ட காலமாகப் பணியாற்றியும் நிரந்தர நியமனம் வழங்கப்படாத சத்துணவு ஊழியர்களை உடனடியாக அரசுத் துறையில் காலிப் பணியிடங்களில் பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி