பேருந்து நிலையப் பணிகளை ஆய்வு செய்த ப. சிதம்பரம்

8பார்த்தது
பேருந்து நிலையப் பணிகளை ஆய்வு செய்த ப. சிதம்பரம்
சிவகங்கை நகராட்சி பேருந்து நிலையத்தின் 4 பகுதிகளில், 2019-ல் காளையார்கோவில், தொண்டி, தேவகோட்டை மற்றும் ராமநாதபுரம், மானாமதுரை பேருந்துகள் நிற்கும் இடங்களில் மேற்கூரைகள் அமைக்கப்பட்டன. மீதமுள்ள 2 பகுதிகளில் தகர மேற்கூரைகள் மற்றும் தரைத்தளம் அமைப்பதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தலா ரூ. 1 கோடி வீதம் மொத்தம் ரூ. 2 கோடியை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கினர். இந்த நிலையில், பேருந்து நிலையப் பணிகளை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆய்வு செய்தார். அவருடன் நகராட்சி ஆணையர் அசோக்குமார், மாவட்டத் தலைவர் சஞ்சய், சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் சோணை, நகரமன்ற உறுப்பினர்கள் தி. விஜயகுமார், மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி