சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இளையான்குடி அருகே சங்கர் (29) அக். 21, காரைக்குடி அருகே பழனியப்பன் (36) அக். 27, சிவகங்கை பேருந்துநிலையம் அருகே ராஜேஷ் (20) நவ. 7 என மூன்று கொலைகள் நடந்துள்ளன. மேலும், நேரு பஜாரில் ஒலி முகமது (30) மீது கும்பல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மானாமதுரை, காளையார்கோவில், காரைக்குடி, திருப்புவனம் பகுதிகளில் 5 பெண்களிடம் இருந்து சுமார் 35 பவுன் நகைகள் பறிக்கப்பட்டுள்ளன. மானாமதுரை தயாநகரில் ஓய்வுபெற்ற ஆசிரியர் மாரியப்பன் வீட்டில் 40 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன. இந்த குற்றச் சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.