சிவகங்கை: வாக்காளர் சரிபார்ப்பு பணியில் மக்கள் அதிருப்தி

772பார்த்தது
சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எஸ்.ஐ.ஆர் படிவங்களை வீடு வீடாக வழங்காமல், பொதுவான இடங்களில் விநியோகித்ததால் பல வாக்காளர்கள் விண்ணப்பங்களைப் பெற முடியாமல் தவிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தொலைபேசி எண்ணிலும் பதில் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி