தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் நடந்து வருகின்றன. விண்ணப்பங்கள் ஆளும் கட்சி முகவர்களிடம் அளிக்கப்பட்டு முறைகேடுகள் நடப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில், வாக்காளர் படிவங்களை வாக்குச்சாவடி அலுவலர்களே நேரடியாக கையாள வேண்டும் என கோரி, அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.