சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுருக்க எழுத்தாளராக பணிபுரியும் வித்யா, மருது பாண்டியர் நகரில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் இருந்த இரண்டு கேஸ் சிலிண்டர்கள் மற்றும் பித்தளை குத்துவிளக்கை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றதாக அவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால், சிலிண்டர்களையே குறிவைத்து திருட்டு நடைபெறுவது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.