சிவகங்கை மாவட்டம் செம்பனூர் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் காளைகளை அவிழ்த்து விடுவதற்காக வந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர், தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வாகனம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.