கூட்டுறவு துறை அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

1பார்த்தது
சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் முவேந்தர் இன முக்குலத்தோர் நலச்சங்கத்தின் சார்பில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயி சற்குணம் படுகொலை சம்பவத்திற்குப் பிறகு அவரது குடும்பத்தினரைச் சந்திக்க தாமதித்ததாகவும், தன் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு விரைந்து நிதி வழங்கியதாகவும் அமைச்சர் மீது குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். விவசாயி சற்குணம் கொலைக்கான விசாரணை வேகமாக நடைபெற வேண்டும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசின் உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி