சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தில், நீதிமன்ற உத்தரவின் பேரில் தனி நபர் ஒருவர் வாங்கிய இடத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டார். இந்தச் சுவர் கட்டப்பட்டால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பணியைத் தடுத்து நிறுத்தி தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸார், நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்ற சுவர் கட்டும் பணியைத் தடுத்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 12 ஆண்கள், 17 பெண்கள் என மொத்தம் 29 பேரைக் கைது செய்தனர். பின்னர் பெண்களை விடுவித்தனர்.