சிவகங்கை: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

61பார்த்தது
சிவகங்கை: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நலவாரியங்களின் கீழ் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தின் சார்பாக பல்வேறு வகையான உதவித்தொகைக்கான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 2023-2024 ஆம் நிதியாண்டிற்கு மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்கிட தேர்வு செய்யப்பட்டுள்ள இளையான்குடி, மானாமதுரை, எஸ். புதூர், திருப்பத்தூர், திருப்புவனம் ஆகிய வட்டாரங்கள் சிவகங்கை நகராட்சி, கானாடுகாத்தான், திருப்பத்தூர், புதுவயல் ஆகிய பேரூராட்சி பகுதிகளைச் சார்ந்த சமுதாய அமைப்புகளுக்கு விருதிற்கான கேடயம் மற்றும் பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். செல்வசுரபி அவர்கள், மகளிர் திட்ட இயக்குநர் திருமதி கவிதபிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி