தமிழகம் முழுவதும் காலை நேரங்களில் வெயிலால் சூடான வானிலை நிலவிய நிலையில், சிவகங்கை பேருந்து நிலையம், முத்துப்பட்டி, வாணியங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று இரவு சுமார் 7 மணியிலிருந்து பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் நகரின் சில சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட நாட்களாக நிலவிய வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் வாகன ஓட்டிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வானிலை ஆய்வுத்துறை அடுத்த சில மணி நேரங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.