சிவகங்கை காந்தி வீதியில் நகைக்கடை நடத்தி வந்த ராமர், இருசக்கர வாகனத்தில் சென்றபோது தனியார் சர்க்கரை ஆலைக்கு சொந்தமான டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முதலில் அடையாளம் காணப்பட்ட டிரைவர் வேறு என்றும், வழக்கில் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள டிரைவர் வேறொருவர் என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.