சிவகங்கை மாவட்டம் சக்கந்தி அருகே கோமாளிப்பட்டி பகுதியில் மாணிக்கம் என்பவரது வீட்டின் அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து உடையும் நிலையில் உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படலாம் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். உயிர் சேதம் மற்றும் மின்விபத்துகள் நிகழும் முன்பே, சேதமடைந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்றி அமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.