சிவகங்கை திருப்பத்தூர் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு, முன்னாள் முதலமைச்சரும்
திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் மு. கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு
திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி. எம். துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கட்சியின் நகர, ஒன்றிய மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.