ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தர்னா போராட்டம்

0பார்த்தது
சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் ஓய்வூதியர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக அரசு தேர்தல் வாக்குறுதியின்படி 70 வயது கடந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பணமில்லா மருத்துவ உதவி வழங்க வேண்டும், காமுட்டேசன் பிடித்தத்தை 180 தவணையிலிருந்து 100 தவணையாகக் குறைக்க வேண்டும், ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ. 2 லட்சம் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எம். ராமசாமி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் எம். கணேசன் போராட்டத்தை முடித்துவைத்தார்.

தொடர்புடைய செய்தி