சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும், மேலும் பணித்தன்மை மற்றும் பணிப்பளுவை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.