வருவாய்த்துறை அலுவலர்கள் சாலை மறியல்

294பார்த்தது
சிவகங்கை மாவட்டம் அரண்மனை வாசல் முன்பு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FERA) சார்பில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வருவாய்த்துறை மற்றும் நில அளவைத் துறை பணியாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். முக்கிய சாலையில் அமர்ந்து மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் தலையிட்டு சுமார் 300 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி