சமேத சோமேஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் திருவிழா

0பார்த்தது
சமேத சோமேஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் திருவிழா
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள சௌந்தரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளியதைத் தொடர்ந்து, காலை 9.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக சனிக்கிழமை (மே 30) தெப்பத்தில் தீர்த்தவாரி, இரவு சப்தாவரணம் மற்றும் பஞ்சமூர்த்திகள் உலா நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி