சிவகங்கை மாவட்டம் காரையூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் – சுமதி தம்பதியினரின் மகன் மகில்மித்திரன் (4) மற்றும் பிரசாந்தின் மகன் வர்ஷன் (4) ஆவர் .இவர்களின் வீட்டின் முன்பாக புதிதாக வீடு கட்டுவதற்கு தோண்டப்பட்ட பில்லர் குழி முழுவதும் மழைநீர் நிரம்பி இருந்ததால் இரு சிறுவர்களும் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்த தண்ணீரில் விழுந்து மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது .இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது