சிவகங்கை: இன்றும், நாளையும் குடிநீா் விநியோகம் ரத்து

0பார்த்தது
சிவகங்கை: இன்றும், நாளையும் குடிநீா் விநியோகம் ரத்து
ராமநாதபுரம் கூட்டுக் குடிநீா் திட்டம் (காவிரி) மற்றும் திருச்சி, முத்தரசநல்லூா் தலைமை நீரேற்று நிலையத்தில் புதன்கிழமை (மே 6) பராமரிப்புப் பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால், நீருந்து பிரதான குழாய்களில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் காரணமாக, சிவகங்கை மாவட்டத்தில் புதன்கிழமை, வியாழக்கிழமை (மே 6, 7) ஆகிய நாள்களில் காவிரி கூட்டுக் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.

தொடர்புடைய செய்தி