சிவகங்கை: நிலுவை ஊதியம் வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சக்கந்தி ஊராட்சியில், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 100 நாள் வேலைத் திட்டத்தின் நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் முத்துக்கருப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 50-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
Job Suitcase

Jobs near you