சிவகங்கை மாவட்டம் தட்டான்குளம் பகுதியில் விவேக்கின் இருசக்கர வாகனத்தை திருட முயன்றதாகக் கூறப்படும் சம்பவத்தில், மாரநாடு பகுதியைச் சேர்ந்த முத்துராமு (22) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரை திருப்புவனம் போலீசார் கைது செய்தனர். வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் லாக்கை உடைத்து திருட முயன்றபோது சத்தம் கேட்டு வெளியே வந்த விவேக்கும் அக்கம் பக்கத்தினரும் அவர்களைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.