சிறப்பு கல்வி கடன் முகாம் -ஆட்சியர் தகவல்

273பார்த்தது
சிறப்பு கல்வி கடன் முகாம் -ஆட்சியர் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்காக, அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் வருகின்ற திங்கட்கிழமை, 23 பிப்ரவரி 2026 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழகண்டனி, பண்ணை மாரிமுத்து மருந்தியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், pmvidyalaxmi.co.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்த விண்ணப்ப நகல், பெற்றோரின் புகைப்படங்கள், வங்கி கணக்கு பாஸ்புக் நகல், இருப்பிட, வருமான, சாதி சான்றிதழ்கள், பான் கார்டு, ஆதார் அட்டை, கல்லூரியின் Bonafide சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் சேர்க்கை ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் வரலாம். முகாமில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, வங்கி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உடனடி கடன் ஆணைகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி