நலம் காக்கும் சிறப்பு முகாம்.

1பார்த்தது
சுகாதாரத் துறை சார்பில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டம் கண்டாங்கிப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், சுற்றுவட்டார 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கலந்து கொண்டு, ரூ. 3,000 மதிப்பிலான இரத்த பரிசோதனை, இ.சி.ஜி, எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் மற்றும் கண், காது, மூக்கு, தொண்டை, பல், எலும்பு, நரம்பியல், மனநலம், சர்க்கரைநோய், இருதய, குழந்தைகள், மகப்பேறு, தோல், சித்த, இயன்முறை, நுரையீரல், அறுவை சிகிச்சை உள்ளிட்ட 17 துறை நிபுணர்களின் இலவச சிகிச்சை சேவைகளைப் பெற்றனர். தமிழகம் முழுவதும் 1,256 உயர்தர மருத்துவ மையங்கள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.