நாடக மேடையின் உடைமாற்றும் அறையில் கல்வி கற்கும் மாணவர்கள்

1பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பெரிய கிளுவச்சி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் மாணவர்கள் மரத்தடியிலும், நாடக மேடையிலும் கல்வி கற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் என்பதால், தற்போது வகுப்புகள் நாடக மேடையின் உடைமாற்றும் அறை மற்றும் பள்ளியின் வரண்டா பகுதிகளில் நடத்தப்படுகின்றன. புதிய கட்டிடம் கட்டப்பட்டாலும், அதில் இரண்டு அறைகள் மட்டுமே உள்ளதால் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு போதுமான வகுப்பறைகள் இல்லை. பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு, மாணவர்களின் தேவைக்கேற்ப புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டும் என பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.
Job Suitcase

Jobs near you