சிவகங்கையில் நடைபெற்ற த. வெ. க கொள்கை விளக்க பிரச்சார கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பரப்புரைப் செயலாளர் நாஞ்சில் சம்பத், பிரதமர் மோடி நாளை மதுரை வருவதாகவும், நாளைதான் எடப்பாடி பழனிச்சாமிக்கு பலி நடக்கப் போவதாகவும் கூறினார். மேலும், திராவிட மாடல் ஆட்சியில் குடிமகன் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் கடன் சுமையுடன் பிறக்கிறார் என்றும் அவர் விமர்சித்தார். கர்ணன் கவச குண்டலத்துடனும், சீதை வெள்ளோடும், கண்ணகி கால் சிலம்போடும் பிறந்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய ஆட்சியின் நிலைமையைச் சுட்டிக்காட்டினார்.