தேர்தல் ஆணையத்தின் தீவிர வாக்காளர் திருத்த நடைமுறைகள் (SIR) குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் கூறுகையில், "SIR படிவங்களை தெளிவாகவும் சரியான தகவல்களுடன் பூர்த்தி செய்ய வேண்டும். அலட்சியம் காட்டக்கூடாது. சமீபத்தில் பீகாரில் 45 லட்சம் மக்களின் வாக்குரிமை பறிபோனது போல, குடியுரிமையே கேள்விக்கு உள்ளாகக்கூடும்," என்றார். தமிழகத்திலும் SIR நடைமுறை செயல்படுத்தப்படுவதால், எந்த வாக்காளரின் வாக்குரிமையும் பறிபோகாமல் உறுதி செய்ய விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வலியுறுத்தப்பட்டது.