மதகுபட்டி அருகே உள்ள விவசாய வயலில் நடவு பணியில் ஈடுபட்டிருந்த பெண்களை நேரில் சந்தித்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்நாதன், வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிந்து வயலுக்கு வந்தார். அங்கேயே வேட்டியை மடக்கிக் கட்டி, பெண்களுடன் சேர்ந்து நாற்று நடும் பணியிலும் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.