சிவகங்கையில் வட்டாட்சியரை வெறிநாய் கடித்த சம்பவத்தைத் தொடர்ந்து, நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் பொற்கொடி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால், மாவட்டம் முழுவதும் குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்களை நாய்கள் கடித்து வருகின்றன. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வட்டாட்சியரை கடித்தவுடன் ஆட்சியர் நடவடிக்கை எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் நாய்கள் திரிவதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தெருநாய்களை கட்டுப்படுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மாவட்ட ஆட்சியர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.