சிவகங்கை: ரூ.7. 25 இலட்சம் மதிப்பீல் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

67பார்த்தது
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 301 மனுக்கள் பெறப்பட்டது. ஆட்சித்தலைவர் ஆஷா மேலும், தொழிலாளர் உதவி ஆணையத்தின் சார்பில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா நலவாரியத்தின் கீழ், பணியிட விபத்தில் மரணமடைந்த பதிவு பெறாத வெளிமாநில கட்டுமானத் தொழிலாளரின் குடும்பத்தினருக்கு, ரூ. 5,00,000/- மதிப்பீட்டிலான பணியிடத்து விபத்து மரண உதவித்தொகையினை வழங்கினார். 

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 02 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 1,01,800/- வீதம் மொத்தம் ரூ. 2,03,600/- மதிப்பீட்டிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ. 15,750/- மதிப்பீட்டிலான மடக்குச் சக்கர நாற்காலியையும், 02 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 2,780 வீதம் மொத்தம் ரூ. 5,560/- மதிப்பீட்டிலான காதொலி கருவிகளையும் என மொத்தம் 06 பயனாளிகளுக்கு ரூ. 7,24,910/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்க

தொடர்புடைய செய்தி