சிவகங்கை அருகே உள்ள சோழபுரம் கிராமத்திற்குப் பாத்தியப்பட்ட ஆண்டி ஐயா, அக்கினி வீரபத்திரர் திருவாளிக்கருப்பு, வடகரை காளி அம்மன் திருக்கோவில் தீமிதி திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர்.
இக்கோவிலில், கடந்த 26ம் தேதி, காப்பு கட்டி கொடியேற்றத்துடன் கோவில் திருவிழா துவங்கியது. தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இந்த தீமிதி திருவிழாவை ஒட்டி, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
இரவு சுமார் 8:00 மணி வரை 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். இத்திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.