சிவகங்கை மாவட்டம் கல்லூரணி ஊராட்சிக்குட்பட்ட அழகாபுரி இந்திரா நகர் பகுதியில் சாலை வசதி, கழிவுநீர் வடிகால் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் இதுவரை செய்து தரப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், இன்று மாயழகு என்பவர் பழைய மனுக்களை மாலையாக கோர்த்து மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். இந்த சம்பவம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.