சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியில் மதியழகனுக்குச் சொந்தமான இடத்தில் கிராம மக்கள் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்தபோது, அனுமதியின்றி மண் அள்ளிக்கொண்டிருந்த டிப்பர் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை மடக்கிப் பிடித்தனர். பின்னர், லாரி மற்றும் ஜேசிபி ஓட்டுநர்களான ராமகிருஷ்ணன், வெங்கட்ராமன் மற்றும் மண் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இளங்கம்பன் ஆகிய மூவரையும் கிராம மக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.