மருது சகோதரர்கள் திருவுருவச் சிலை திறப்பு விழா

294பார்த்தது
சிவகங்கைச் சீமையை ஆண்ட சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களின் திருவுருவச் சிலை சிவகங்கையில் ₹1.06 கோடி செலவில் திறக்கப்பட்டது. மதுரையிலிருந்து முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக சிலையை திறந்து வைத்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் நிறுவப்பட்ட இந்த சிலை திறப்பு விழாவில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன், தொழில்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வு சிவகங்கையின் வரலாற்றுப் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

தொடர்புடைய செய்தி