சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாமில் மனு அளிக்க வருபவர்களுக்கு முதன்முறையாக டோக்கன் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டது. முதலில் 50 பேருக்கு டோக்கன் வழங்கி, அவர்கள் முடித்த பின் அடுத்த 50 பேருக்கு வழங்கப்பட்டது. இதனால் அலுவலகத்திற்குள் செல்லும்போது தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.