உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த வலியுறுத்தல்

1பார்த்தது
சிவகங்கை அருகே அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் லூயிர் ஜோசப் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மாநில மையத்தின் முடிவின்படி பிப்ரவரி 10 முதல் தொடங்கிய காலவரையற்ற வேலைநிறுத்தம் மூன்றாவது நாளாகத் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்கும் இந்த வேலைநிறுத்தம், ஊரக உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாத சூழலில் கடினமான பணிச்சூழலை எதிர்கொள்ளும் அலுவலர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 18 கோரிக்கைகளை வலியுறுத்துகிறது. அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும், இல்லையெனில் சென்னை பனகல் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றும் சங்க மையம் வலியுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி