சிவகங்கை: வடமாடு மஞ்சுவிரட்டு.. 117 வீரர்கள் பங்கேற்பு

397பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உழவூரணி முனியய்யா கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு, கோயில் திடலில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, தேனி, தஞ்சாவூர், திண்டுக்கல், விருதுநகர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 13 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 117 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்து களமிறங்கினர். ஒவ்வொரு காளைக்கும் 25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. சிறந்த வீரர்களுக்கும் காளைகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி