சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு அலகுகள் (VVPAT) வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை மாவட்ட ஆட்சியர் திருமதி கா. பொற்கொடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கண்காணிப்பு வசதிகள், சிசிடிவி கேமராக்கள், இரட்டை பூட்டுகள், காவல்துறை பாதுகாப்பு மற்றும் தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை அவர் சரிபார்த்தார். இயந்திரங்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன, சேதமின்றி இருப்பதை உறுதி செய்யும் தினசரி கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தேர்தல் வட்டாட்சியர் திரு. அ. மேசியாதாஸ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.