சிவகங்கை அருகே தமராக்கி கிராமத்தில் கலியுக வரத ஐயனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 16 காளைகள் களமிறக்கப்பட்டன. 112 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஒரு காளையை அடக்க 25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. காளைகளும் வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். சிறந்த வீரர்களுக்கும் காளைகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் 7 வீரர்கள் காயமடைந்தனர்.