ரேஷன் கார்டு இல்லாமல் தவிக்கும் பெண்

0பார்த்தது
சிவகங்கை அருகே கூத்தலூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த முத்துக்குமாரி, புதிரேஷன் கார்டு இல்லாமல் தவித்து வருவதாகவும், புதிய கார்டு கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், ஐந்து வயது குழந்தையுடன் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், தாயாரின் ரேஷன் கார்டிலிருந்து தனது பெயர் நீக்கப்பட்டதால் சிரமம் அனுபவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முத்துக்குமாரி, அவரது கணவர் மருதுபாண்டியன் மற்றும் குழந்தை பாண்டிய யஸ்விதா ஆகியோரின் பெயர்களை இணைத்து புதிய குடும்ப ரேஷன் கார்டு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you