
இருசக்கர வாகனம் திருட்டு போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (49) என்பவர், சியா முத்து கம்மாக்கரை அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு எஸ். எஸ். கோட்டை பகுதியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டை பார்வையிடச் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனம் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து முருகானந்தம் எஸ். எஸ். கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


























