பெரும்பிடுகு முத்தரையரின் 1351-வது சதய விழா

115பார்த்தது
திருப்பத்தூர் பேருந்து நிலையம் எதிரே, பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1351-வது சதய விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு அரசின் கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் டி. கே. பிரபு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மேலும், திருப்பத்தூர் எம்எல்ஏ சீனிவாச சேதுபதியும் பங்கேற்றார். இருவரும் விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி